உதவும் பொற்கரங்கள் அமைப்பின் மனிதநேயப்பணி!


பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாரிய  வெள்ளப் பாதிப்பின் போதும் தனது மனித நேயப்பணியை செய்திருந்தது.

தொடர் மழையால் பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு வெள்ளத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த மக்கள் அருகில் உள்ள பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் தஞ்மடைந்திருந்தனர். அன்றைய தினமே உடனடித் தேவையாக அந்த மக்களுக்கு சமைத்த உணவுகளை உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் கனடாவில் வசிக்கும் விசு கணபதிப்பிள்ளை வழங்கியிருந்தார்.

இவ்வாறு மேலும் பல பொது அமைப்புக்களும், தனி நபர்களும் உடனடி  தேவை அறிந்து நிவாரணப்பணிகளை முன்னெடுத்திருந்தனர்.