வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்புற்ற பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பில் வசிக்கும் 116 குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளை ”கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினர் நெற்று (30) வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், சமூக சேவை உத்தியோகத்தர், கிராம சேவகர், மற்றும் அமைப்பின் தலைவர் திரு.ஜெயபிரகாஷ், செயலாளர் திரு.சிறிஹரன், பொருளாளர் திரு.நவநீதன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.