காரைதீவு சடலம் தேடுதலை நேரடியாக அவதானித்த கிழக்கு ஆளுநர்!

( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (29) வெள்ளிக்கிழமை மாலை காரைதீவு பிரதான வீதியில் சடுதியாக இறங்கினார்.

அங்கு காரைதீவு அனர்த்தத்தின்போது மாயமாகியோரை தேடும் படலத்தை நேரடியாக அவதானித்தார்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதான வீதியில் இறங்கிய அவர் சற்று நேரம் தேடுதலை அவதானித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

காரைதீவு பிரதான வீதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அள்ளுண்டு மாயமான அறுவரின் சடலங்கள் ஏலவே மீட்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

 நேற்று (29) வெள்ளிக்கிழமை  இறுதியாக ஏழாவது சடலத்தை தேடும் பணி இடம்பெற்றது.

இன்று காலையும் இறுதியாக ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

You missed