நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நீர் வழங்கல் சபையின் அலுவலகங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் போன்றன வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதாலும் நீர் வழங்கல் குழாய்கள் செல்லும் பாதைகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் எந்த நேரத்திலும் நீர் வழங்கலில் தடங்கல் ஏற்படலாம்.

எனவே, இதனை கருத்திற் கொண்டு பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து பாவிக்குமாறும் ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின் அவை தொடர்பாக நீர்ப்பாவனையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
பொறியியலாளர்
ஐ.எல்.கைதர் அலி
பிராந்திய முகாமையாளர்
அக்கரைப்பற்று.
27.11.2024
12.00pm