வன்முறை சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் இருந்து
இல்லாதொழித்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருவருட செயல்திட்டத்தின் மாவட்ட மட்ட மாநாடு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்
டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தச் செயல்திட்
டத்தின் ஆரம்ப நிகழ்வு கப்சோநிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ‘வன்முறைகளை தவிர்க்கும் இளைஞர்கள்’
எனும் தொனிப்பொருளிலானவீதி நாடகத்தை ஒரு வருடகாலமாக ஆற்றுகைப்படுத்தி
வந்த 300இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கும், கண்காட்சி
கூடாரங்கள் என்பனவற்றின் மூலம் சிறப்பித்து பயிற்சி நிறைவு
செய்த மாணவர்களுக்கான சான் றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் ஜெகராஜன், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை தெற்கு , கல்முனை வடக்கு ,அம்பாறை, தமன மற்றும் அக்
கரைப்பற்று பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக இளைஞர் மன்ற செயல் பாட்டாளர்கள் உட்பட ஹெல்விடாஸ் நிறுவனத்தின் உத்தியோ
கத்தர்களும் கலந்துகொண்டனர்