பொதுக்கடன் மேலாண்மை சட்டம் நாளை முதல் நடைமுறையில்!

அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25) முதல் நடைமுறைபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டடுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி, அரச கடன் முகாமைத்துவ சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.