பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்!
-பிரபா-
பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கு உட்பட்ட பொலீஸ் சமூக பாதுகாப்பு குழு பிரதானிகளுக்கான கூட்டம் நேற்று (23) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
பெரியநீலாவணை பொலிஸ் சமூக பாதுகாப்பு குழுவின் தலைவர் Z.சாஜித் முனீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியச்சகர் ரி. எச். டி. எம். எல். புத்திக மற்றும் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க, சிவில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களின் பொலிஸ் சமூக பாதுகாப்பு குழு பிரதானிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிராமங்களிலேயே தற்காலகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திருட்டுச் சம்பவங்கள், போதை பொருள் பாவனை,விற்பனை, மற்றும் சமூக சீர்கேடு தொடர்பான விடயங்கள், இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் விடையமாக பொலிஸ் அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுடன் இணைந்ததாக பொலிஸ் சமூக பாதுகாப்பு குழு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/11/000-1024x768.jpeg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/11/1a3dbc0e-a93b-45a9-b77f-86ee6702c757-1024x768.jpeg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/11/2f89e0d6-de33-4858-b218-477d41ce3cbd-768x1024.jpeg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/11/b4cf689f-1166-45ae-bd4f-c371f748a3bc-768x1024.jpeg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/11/bf25d677-b90d-40c4-a37c-688e3f9f9adf-1024x768.jpeg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/11/c6bdd9a1-0ebd-491a-9b1d-71b7954f0320-1024x768.jpeg)