பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன் பிரகாரம் பொும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் ரியாஸ் சாலி பிரதி சபாநாயகராக நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள முனீர் முளப்பர் பிரதி அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி பொும்பாலும் தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.