கல்முனை பொது நூலக உதவியாளர் தங்கேஸ்வரிக்கு சேவைநலன் பாராட்டு விழா!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை பொது நூலகத்தில் 30 ஆண்டுகள் நூலக உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்கின்ற திருமதி தங்கேஸ்வரி சுகிர்தனுக்கு நூலக ஊழியர்கள் ஒழுங்கு செய்திருந்த சேவை நலன் பாராட்டு விழா செவ்வாய்கிழமை (12) நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நற்பிட்டிமுனை நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுதீன் உட்பட கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் நற்பட்டிமுனை பொது நூலகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது திருமதி ரி. சுகிர்தனின் 30 வருட கால உன்னத சேவைகள் பற்றி புகழாரம் சூட்டி பாராட்டுரைகள் இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



