சங்கிடம் சரணடைந்தார் வீட்டுச் சின்னத்தின் 3 ஆம் இலக்க வேட்பாளர் ஜனார்தன்?
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) வேட்பாளர் ஜனார்த்தன் அவர்கள் வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது “ வட்மடு மேய்ச்சல் தரை வழக்கு 2015 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசு கட்சியினால் முடிக்கப்பட்டுள்ளது “ என கூறியுள்ளார்.
ஆனால் இது உண்மை கிடையாது இவ் வழக்கின் தவணை 04.11.2024 எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்த தவணையும் அடுத்த வருடம் 03.2025 அன்று வழங்கப்பட்டுள்ளது.( ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)
இந்த வழக்கானது 13 வருடங்களாகியும் இன்று வரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என பால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்தாரா? வீட்டுச் சின்னத்தின் 03 ஆம் இலக்க வேட்பாளர் க.ஜனார்தன்.
இதனால் இந்த பொய் குற்றசாட்டிற்கு திரு ஜனார்த்தனுக்கு எதிராக நஸ்டஈடு வழக்கு தொடர கால்நடை பண்ணையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர்.
இதனை அறிந்த வேட்பாளர் திரு.ஜனார்தன் அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன் பிரதான தேர்தல் பிரச்சார காரியாலயத்திற்கு வருகை தந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி இருக்கும் திரு. புஸ்பராசா மற்றும் அவரின் சங்க உறுப்பினர்களை சந்தித்து மன்னிப்பு கோரினார். என தெரிவிக்கப்படுகிறது.
திரு. ஜனார்தன் கூறியதாவது
“ சங்கு சின்னம் ஒட்டு மொத்தமாக 80% இற்கும் அதிகமான வாக்குகளை பெரும் என தான் எதிர் பார்ப்பதாகவும்”
“தான் சென்ற பிரச்சார பிரதேசம் எங்கும் அண்ணன் புஸ்பராசா இற்கே அதிகளவு ஆதரவு இருப்பதாகவும்”
“தன்னை தமிழ் அரசுகட்சியின் ஏனைய வேட்பாளர்கள் தன்னை வெறுப்பதாகவும் அதனால் தனது ஆதரவை அண்ணன் புஸ்பராசா இற்கு வழங்குவதாகவும் எதிர் வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அண்ணனுடன் சேர்ந்து சங்கு சின்னத்தில் பயனிக்க விரும்புவதாகவும் கூறினார்” என அறிய முடிகிறது.