பாராளுமன்ற தேர்தல் காரணமாக வாகன ஆண்டு அனுமதிப்பத்திரங்களை பெறுவதில் சிரமம் ஏற்படலாம்; கிழக்கு மாகாண மோட்டார் திணைக்களம் தெரிவிப்பு!
பாராளுமன்ற தேர்தல் காரணமாக எதிர்வரும் 13, 14 ம் திகதிகளில் பிரதேச செயலக மோட்டார் வாகன பிரிவுகளில் ஆண்டு அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாமென கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் கடமைகளுக்காக ஆளனியினரை விடுவிக்கும்பொருட்டு எதிர்வரும் 13, 14ம் திகதிகளில் பிரதேச செயலக மோட்டார் வாகனப் பிரிவுகள் மூடப்பட்டிருக்குமென தெரவிக்கப்படுகின்றது.
எனவே சிரமங்களை எதிர்கொள்ளாது எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை கிழக்கு மாகாண மோட்டார் வாகனப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை சேவைகள் வழமைக்கு திரும்புமெனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.