தொடர்ச்சியாக ஏமாற்றமடைந்த மக்கள் சங்கின் பின் அணி திரண்டுள்ளனர் – வேட்பாளர் சோ.புஸ்பராசா
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பல இன்னல்களை அனுபவித்தே வருகின்றனர். காலத்திற்கு காலம் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள் காலத்தை வீணடித்ததை தவிர நடந்தது எதுவும் இல்லை. எமது மக்களின் இருப்புக்கள் அடிப்படை உரிமைகள் அடையாளங்கள் மாற்று இனத்தவர்களால் அழிக்கப்பட்டே வருகின்றன. இனியும் நாம் ஏமாற மாட்டோம் என அம்பாறை மாவட்ட மக்கள் செல்லும் இடமெல்லாம் எம்முடன் அணிதிரளுகின்றனர் என சங்கு சின்னம் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் சோ.புஸ்பராசா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காடு ஆகிய பகுதிகளில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போது பல பொது அமைப்புக்களும் விளையாட்டுக்கழகங்களும் பெருந்திரளாக கூடி தமது ஆதரவினை தெரிவித்தனர்.
அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த மக்களுக்கு பதவிகள் இல்லாமலேயே எமது வளங்களை எவ்வாறு காத்துக் கொடுத்தேன் என்பதற்கு வெளிப்படையாகவே பல ஆதாரங்கள் உள்ளன. மக்கள் ஆணை கிடைத்தால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் என்னால் நிறைவேற்ற முடியும் என்றார்.