கலைஞர்.ஏ.ஓ.அனலுக்கு ஸ்கை தமிழ் விருது.

பல்வேறு துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது விழா, ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஜே. எம். பாஸித் தலைமையில் அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் மிக பிரம்பாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலைஞர்.ஏ.ஓ.அனல் “சிறந்த கலைஞர் விருது” வழங்கி கெளரவிக்குப்பட்டார். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் எழுத்துருக்கலை, ஓவியம், இலக்கியம், சிற்பம், அறிவிப்பாளர், புகைப்படக்கலை, குறுந்திரைப்படம், மரச்செதுக்கல், ஆலய வர்ணப் பூச்சு, அரைபுடைப்பு சிற்ப வேலைகள், இலக்கிய விமர்சனம், புத்தக அட்டை கலைஞர், கதைச்சித்திரக் கலைஞர், சுவரோவியங்கள் வரைதல் என பல்துறை சார்ந்து 26 வருடங்களாக தன்னை அர்ப்பணித்து கலைப்பணி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் விருது விழாவில் பிரபல ஊடக ஆளுமைகள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத்,

புனானை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் P.T.A. Hassan, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், மூத்த எழுத்தாளரும், அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரி கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் நஜ்முல் ஹுசைன், சிறப்பு அதிதியாக இலக்கியச் செம்மல் கலாபூஷணம் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை மருத்துவ பணிப்பாளர் வைத்தியர் சனா, பிறை எப் எம் பிரதிப்பணிப்பாளரும் பிரபல அறிவிப்பாளருமாகிய பஷீர் அப்துல் கையூம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி FHA.ஷிப்லி, ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசனின் தலைவியும் அவுஸ்த்ரேலியா நாட்டின் பெண்கள் கவுன்சிலின் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி மரியம் நளிமுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.