மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. கந்த சஷ்டி திதி நாளில் முருகனை விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். அதில் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டிக்கு மகா சஷ்டி என்ற பெயர் உண்டு அதை தான் கந்தசஷ்டி என்று கூறுகிறோம். அனைத்து பக்தர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல விரத நாள் கந்த சஷ்டி விரதம் ஆகும்.கந்த சஷ்டி விரதம் இத்தனை சிறப்பு பெற்ற இந்த மகா கந்த சஷ்டி விரதத்தை எப்படி இருக்க வேண்டும், கந்த சஷ்டி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வருடத்தின் கந்த சஷ்டி விரதம் இன்று 02. 11 .2024 துவங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் கந்த சஷ்டி விரதம் உள்ளது.பொதுவாக விரதம் என்பதற்கு காப்பது என்ற பொருள் உண்டு .அதாவது ஒரு செயலை முழு மனதோடு விடாமல் காப்பது என்ற அர்த்தமாகும். எனவே எந்த ஒரு விரதத்தையும் முழு மனதோடு விடாமல் தொடர்ந்து இருந்து வழிபாடு செய்தால் தான் அதற்கான பலனை நம்மால் பெற முடியும்.
கந்த சஷ்டி விரதத்தை பொருத்தவரையில் சில ஒரு நேரம் மட்டும் விரதம் இருந்துவிட்டு மற்ற வேலைகளை உணவை எடுத்துக் கொள்வர் மற்றும் சிலர் இரண்டு வேளை உணவை விரதம் இருந்து ஒருவேளை மட்டும் உணவு அருந்துவர். மேலும் சில பக்தர்கள் மூன்று நேரமும் கடுமையாக விரதம் இருந்து அதாவது உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து வழிபாடு செய்வர்.இந்த கந்த சஷ்டி விரதத்தில் பால் மற்றும் பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கும் வரை ஒன்று உள்ளது ,அதனைத் தொடர்ந்து மிளகு விரதம் உள்ளது ,மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளாமல் பால் மற்றும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடும் விரதம் உள்ளது. அதனைத் தொடர்ந்து வெறும் காய்கறிகள் மட்டுமே சாப்பிடும் விரத முறை ஒன்று உள்ளது .இதை உங்களுக்கு ஏற்றவாறு ஒன்றை நீங்கள் தேர்வு செய்து விரதத்தை தொடங்கலாம் விரதம் இருக்கும் போது தண்ணீர் குடிக்க கூடாது, என்று சிலர் இருப்பது உண்டு. ஆனால் விரதம் இருக்கும் போது தண்ணீர் குடிக்கலாம்.
அந்த வகையில் இந்த கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் 02. 11. 2024 அன்று காலை 6 மணிக்கு உள்ளாகவே விரதத்தின் காப்பு கட்டுதலை செய்து விட வேண்டும்.விரதத்தை ஆரம்பிக்கும் போது முருகன் படத்தின் முன் ஒரு கலசம் வைத்துக்கொண்டு அதில் வாசனை திரவியங்களை போட்டு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து, ஒரு எலுமிச்சை பழம், மாவிலை வைத்து தேங்காய் வைத்து மஞ்சள் ,குங்குமம் வைத்து கலசத்தை தயார் செய்து அதனை பச்சரிசியின் மேல் வைத்து காலை 6 மணிக்குள் இதனைத் தொடங்கி விட வேண்டும். ஆறு மணிக்குள் காப்பு கட்டிக்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கி தொடர்ந்து ஏழு நாட்கள் முருகனுக்கு மலர் அலங்காரம் செய்து முருகரின் பதிகங்களை பாடி விரதத்தை நிறைவு செய்யலாம்.
இந்த கந்த சஷ்டி விரதம் இருப்பதால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும், திருமண வரத்திற்கு கந்த சஷ்டி விரதம் இருக்கலாம் கடுமையான நோய் இருப்பவர்கள் கந்தசஷ்டி விரதம் இருக்கலாம் செல்வம் பெருக வாழ்க்கையில் பிரச்சனை உள்ளவர்கள் தொழில் விருத்தி அடைய போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த கந்த சஷ்டி விரதம் நிச்சயம் பலன் அளிக்கும்.