Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
அம்பாறையில் தமிழரின் அடிப்படை உரிமையை ஒரு இனவாத கும்பலால் தடுக்க முடியுமென்றால் , அதே நாடாளுமன்றில் இருந்த எம்மவர்களால் ஏன் தீர்வு காண முடியவில்லை? இது யாரின் இயலாமை? கேள்வி எழுப்புகிறார் சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசா - Kalmunai Net

அம்பாறையில் தமிழரின் அடிப்படை உரிமையை ஒரு இனவாத கும்பலால் தடுக்க முடியுமென்றால் , அதே நாடாளுமன்றில் இருந்த எம்மவர்களால் ஏன் தீர்வு காண முடியவில்லை? இது யாரின் இயலாமை? மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்-


அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இனியும் காலத்தை வீணடிக்கும் பிரதிநிதிகளை உருவாக்க வாக்களிக்க கூடாது. எமது மாவட்ட தமிழ் மக்களின் நிலை இரு பக்க தவில்போன்றது, அதிலும் ஒரே மொழிபேசும் இனத்தில் உள்ள இனவாத அரசியல்வாதிகளே எம்மக்களின் இருப்பை அம்பாறை மாவட்டத்தில் அழிக்கும் சூழ்ச்சிகளை செய்து வருகின்றார்.,


எமது அடிப்படை உரிமையை அவர்களால் தடுக்க முடியும் என்றால் ,இதே மாவட்டத்தில் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்லும் எம்மவர்களால் ஏன் தீர்வைத் தர முடியவில்லை ? இது வாக்களித்த மக்களின் இயலாமையா ? இயலும் என வந்து வாக்குகளைப் பெற்று காலத்தை வீணடித்த எமது பிரதிநிதிகளின் இயலாமையா? என்பதை சிந்தியுங்கள்.


காலத்தை வீணடிக்கும் பிரதிநிதிகளை அனுப்பி கடந்த கால தவறுகளை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் செய்ய மாவட்டார்கள் என்று நம்புகின்றேன். என சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா இன்றைய தினம் வீரச்சோலை கிராமத்தில் மக்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்