ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை மறக்கும் கட்ந்தகால அரச தலைவர்களைப்போன்றே ஜனாதிபதி அநுரவும் உள்ளார் – எம்.ஏ சுமந்திரன் குற்றச்சாட்டு

‘நாட்டு மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய
மக்கள் சக்தியால் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக
இப்போது சறுக்கத் தொடங்கியிருக்கின்றன. பதவிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுகுத்துக்கரணம் அடிக்கின்றார்.’

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம்
தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரி
வித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகளிலே தமிழ் மக்கள் சம்பந்தமான வாக்குறுதிகளில் பயங்கரவாதத்தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்படும்என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் இந்த விடயம் தேர்தல் கால வாக்குறுதி மட்டுமல்லாமல் தொடர்ச்சியாகத் தங்களுடைய நிலைப்பாடாகத் தேசிய மக்கள்சக்தி வைத்திருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியான தெளிவான நிலைப்பாடாக இருந்த ஒரு விடயத்தை
இப்போது ஆட்சிக்கு வந்த உடனே அந்தச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசிய
மில்லை என்றும், அதை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்தால் மட்டும்
போதும் என்றும் தேசிய மக்கள் சக்தியினர் சொல்லுகின்றனர்.
இவ்வாறான நிலைப்பாடுகள் என்பது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசின்
ஒரு குத்துக்கரணம் ஆகும். ஏனெனில் தாங்களாக நீண்டகாலமாக எடுத்திருந்த
ஒரு நிலைப்பாட்டைப் பதவிக்கு வந்த பின்னர் மாற்றுவது உண்மையில்
அதுவொரு குத்துக்கரணம்தான் என தெரிவித்தார்.