மூலிகைத் தோட்டத்தின் முன்னோடி மகிளூர்முனை வைத்தியர் க.மாணிக்கபோடி!
இயற்கையை வளர்க்க வேண்டியது எமது கடமை என பெயரளவில் இல்லாமல் ஆரோக்கிய வாழ்வுக்கு அத்திவாரம் இடும் சேவையை செய்து வருகின்றார் மட்டக்களப்பு மகி@ரைச் சேர்ந்த வைத்தியர் மாணிக்கபோடி. தான் கற்றதையும் தனது அனுபவத்தையும் பிறறும் பயன் பெறும் வகையில் உபயோகிக்கும் வைத்தியர் மாணிக்கபோடியின் செயற்பாடு வரவேற்றகத்தக்கது.
இவர் மூலிகை மரங்களின் விதைகளை நாற்றுளுக்களை உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் சேவை அடிப்படையில் விற்பனை செய்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிளூர்முனை கிராமத்தை சேர்ந்த வைத்தியர் மாணிக்கபோடி மூலிகை நாற்றுக்களை வழங்குவதோடு மாத்திரமல்லாது வெட்டி வேரை தனது காணியில் உற்பத்தி செய்து மாலைகள் கட்டி விற்பனை செய்வதுடன் மூலிகை எண்ணை உட்பட மருந்துகளையும் உற்பத்திசெய்து வழங்குகிறார்.
நோய்களுக்குரிய மூலிகையை வீட்டில் உற்பத்தி செய்து தேடி வருவோருக்கு ஆலோசனையுடன் நோய்களுகப்குரிய பரிகாரங்களையும் பயன்படுத்தம் முறைகளையும் விபரித்து வீட்டு வைத்தியமாக மூலிகை செடிகளை வீட்டில் வளர்க்க வழி செய்யும் சேவையை செய்துவருகிறார்.
இவர் களுவாஞ்கிகுடியிலும் தனது காணியில் மூலிகை தோட்டம் செய்கையினையும் செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
மூலிகை செடிகளை பெறுவதற்கு இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்….0740585218