ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர். ஜே ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் பாடசாலையின் இராமகிருஷ்ணா அரங்கில் இன்று (23) காலை நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.உதயகுமார் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் பாடாசலையின் பழைய மாணவருமான கௌரவ நீதிபதி த.கருணாகரன்; கலந்து சிறப்பித்தனர்.
; சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர், ஏ.எம்.நௌபர்டீன் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கீ.கமலமோகனதாசன், பிரதி அதிபர்களான மதியழகன் மகேஸ்வரன் சதீஸ்குமார் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், எஸ். அகிலன், பழைய மாணவர் சங்க உறுப்பினர். வி.சுகிர்தகுமார் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் அதிதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் வரவேற்கப்பட்டதுடன் மாணவ தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட 88 மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளினால் சின்னம் சூட்டப்பட்டது.
இதன்போது மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட பேச்சாளர் மேடை (Podium) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
திருக்கோவில் கல்வி வலயமானது க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைகளின் பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய ரீதியில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் பெறுபேறுகளும் இதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.
மேலும் பல்வேறு இணைப்பாடவிதானங்களிலும் இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்கள் மாவட்ட மாகாண தேசிய ரீதியிலும் பல சாதனைகளை நிலைநாட்டிவருவதையும் பலரும் பாரட்டி பேசினர்.