யாருக்காகவோ தேசியப்பட்டியலுக்கு வாக்கு சேகரிக்க ஒன்றுபடாத வீடா? விட்டுக்கொடுப்புடன் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க ஒன்றிணைந்து களத்தில் நிற்கும் சங்கு சின்னமா ? மக்களே முடிவெடுங்கள் – வேட்பாளர் கி.லிங்கேஸ்வரன்

வடக்கு கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழரின் அரசியல் பலம் குறைவாக உள்ளமையினால் பிரிவினைகளை மறந்து எமது மாவட்ட தமிழ் மக்களின் நிலையினை கவனத்தில் எடுத்து பிரிந்து நிற்காமல் ஓன்றிணைந்து போட்டியிட முடிவெடுக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் தலைமையும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளும் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் முதல் தெரிவாக தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிட ஓன்றிணைந்து இணங்கினர் அம்பாறையில் சங்கு சின்னத்திலும் போட்டியிடுவதென இணக்கம் காணப்பட்டது. ஆனால் அம்பாறையில் போட்டியிடும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் இணக்கத்திற்கு வராமல் தனியாக போட்டியிடுகின்றார்கள். இது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலனில் அக்கறை இல்லை அவர்களின் சுயநலமே என்பது வெளிப்படையானது என சங்கு சின்னத்தில் போட்டியிடும் கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்ட நிலை கருதி ஒற்றுமையாக விட்டுக்கொடுத்தது சங்கு சின்னத்தில் போட்டியிடுவது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும் . எமது அணியில் ஐந்து கட்சிகள் உள்ளன அப்படி இருந்தும் ஆசனப்பங்கீட்டில் ஐந்து வேட்பாளர்களை தமிழரசுக்கட்சி சார்பாக தாருங்கள் என்று கேட்டிருந்தோம் முடிந்தவரை இறுதிவரை பொறுமை காத்தோம் காத்திருந்தோம் ஆனால் அவர்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை.


கரணம் தப்பினால் மரணம் என்பது போல் எமது மாவட்டத்தில் ஆசனத்தை இழந்தால் எமது சமூகப் பொருளாதாரம் இருப்பை அழிக்கும் ஓரவர் மாற்று இனத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். இதை தடுக்க வேண்டும்.


அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே உங்கள் கைகளிலே தமிழரின் பிரதிநிதித்துவம் தங்கியுள்ளது ஐந்நூறு ஆயிரம் வாக்குகள் எடுக்கும் கட்சிகளை நிராகரியுங்கள் 90 வீதம் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்ட சங்கு சின்னத்தில் போட்டியிடும் அணியை தெரிவு செய்வதா ? பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் கவலையில்லாமல் எங்கையோ இருக்கும் ஒருவரின் தேசிய பட்டியலுக்காக வாக்கை சேகரிக்கும் வீட்டு சின்னத்தை தெரிவு செய்வதா ? என்பதை மக்களே நீங்கள் தீர்மானியுங்கள்.

வாக்கை பிரிக்க நாங்கள் வரவில்லை வாக்குகளை சேகரித்து ஆசனத்தை தக்க வைக்கவே நாங்கள் களத்தில் சங்கு சின்னத்தில் இறங்கியுள்ளோம் என்றார்.

You missed