நாடளாவிய ரீதியில் 8388 வேட்பாளர்கள் போட்டி; அம்பாறையில் ஏழு ஆனங்களுக்காக 640 வேட்பாளர்கள் களத்தில்!


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 8388 பேர் போட்டியிடுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட 690 வேட்பு மனுக்களின் கீழ் இவர்கள் போட்யிடுகின்றனர்.

225 ஆசனங்களில் வாக்குகள் மூலம் 196 ஆசனங்கள் தெரிவாகும், 29 ஆசனங்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவாகும். 196 ஆனங்களுக்காகவே 8388 வேட்பாளர்கள் போட்டியிடுகிழன்றனர்.

இதில் கொழும்பு மாவட்டத்தில் அதி கூடிய வேட்பாளர்கள் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் களத்தில். அம்பாறை மாவட்டத்தில் ஏழு ஆசனங்களுக்காக 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.