கார்மேல் பற்றிமாவின் 125 வது ஆண்டு (jubilee) விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (13) சிறப்பாக இடம் பெற்றது! – (photos)


கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று தொடக்கம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 வரை கொண்டாடப்படவுள்ளது.

இதன் தொடக்க விழா இன்று (13) பாடசாலை முதல்வர் அருட் சகோதரர்.S.E ரெஜினோல்ட் அவர்களின் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.


இவ் விழாவுக்கு மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா அடிகளார் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தார்.

விழாவின் கௌரவ அதிதிகளாக கார்மேல் பற்றிமா கல்லூரியின் தொடக்க முதல் இன்று வரை நிர்வகிப்பில் பங்காற்றிய வெவ்வேறு துறவற சபைகளின் மேலாளர்கள் என்ற வகையில் இலங்கை இயேசு சபையின் மாகாண மேலாளர் அருட்தந்தை. சுஜீவ அஞ்சலோ பத்திரன, கார்மேல் கன்னியர் சபை மாகாண மேலாளர் அருட்சகோதரி. M.நிலாந்தி, இலங்கை அன்புச் சகோதரர்கள் சபையின் மாகாண மேலாளர் அருட் சகோ. அன்ரனி கிறிஸ்துராஜா, மற்றும் டீலா சல்லி சகோதரர்கள் துறவற சபையின் கிழக்காசிய பொறுப்பாளர் அருட் சகோதரர் பேற்றன் பெரேரா ஆகியோரும் சிறப்பு அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. MSS .நஜீம் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், துணை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இன்றைய நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது.பாடசாலையின் வரலாறு அடங்கிய துண்டுப்பிரசும் மற்றும் இறு வெட்டு என்பன வெளியிடப்பட்டதுடன் , ஆயர் அவர்களினால் 125 ஆவது ஆண்டு (jubilee) கொண்டாட்ட பிரகடணம் வாசிக்கப்பட்டது.

ஓக்டோபர் 2024 13 ஆம் திகதியில் இருந்து அடுத்த வருடம் ஓக்டோபர் 2025 வரை ஒரு வருடம் இடம் பெறவுள்ள 125 ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பான விபரங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.

பாடசாலை முதல்வர் மற்று நிகழ்வு குழுவால் நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.