மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92  ஆண்டு புலன அணியினரின் ஏழாவது ஒன்று கூடலும் அணித்தலைவரின் மணி விழாக் கொண்டாட்டமும் கடந்த சனிக்கிழமை(28) இடம்பெற்றது.

 நாடறிந்த பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய  வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் வைரவிழா அகவையில் கால் பதிக்கும் நிகழ்வை யொட்டி பாசிக்குடா அமாயா விடுதியில் மணிவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

36 வருட கால கல்விச் சேவையிலிருந்து சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கடந்த வெள்ளிக்கிழமை தனது அறுபதாவது வயதில்  ஓய்வு பெற்றமை தெரிந்ததே.

இவரது 60 வது அகவை பிறந்த நாளான சனிக்கிழமை (28) சனிக்கிழமை பாசிக்குடா அமயா விடுதியில் அவர் சார்ந்த மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 1991/92 புலன அணியினர் மணிவிழாக் கொண்டாட்டத்தை பொன் .நடராஜா தலைமையில் முன்னெடுத்தனர்.

அதன் போது திருகோணமலை தொடக்கம் திருக்கோவில் வரையிலான புலன அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அவரது குடும்ப உறவுகள் சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம் கீதா தம்பதியினர் மற்றும் காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கீதா தம்பதியினரும் கலந்து சிறப்பித்தனர்.

சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களாக மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின் தலைவரும் புலன் அணியின் ஸ்தாபகருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா( ஜே.பி)  காரைதீவைச் சேர்ந்தவராவார்.

 இம்மணி விழாக் கொண்டாட்டம் மதிய விருந்துடன் சிறப்பாக நடைபெற்றது.

You missed