அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நிலை மையினை கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் ஓரணியில் இறங்க வேண்டும்! மு. இராஜேஸ்வரன் மு. மா. உறுப்பினர்

நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டால் மட்டுமே அம்பாறை மாவட்டத்தில் தமிழ் ஆசனத்தை காப்பாற்ற முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..

அம்பாறை மாட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். பல கோணங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வளங்கள் சுரண்டப்படுவதுடன், உரிமைகளும் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன.
உதாரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் யாவரும் அறிந்த விடயம்.
இவ்வாறான நிலையில் கட்சி, சின்னம் என்று இழுபறி படாமல் விட்டுக்கொடுப்புடன் தமிழ் கட்சிகள் ஒரு இணக்கத்துக்கு வர வேண்டும்.
இல்லையேல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழ் வாக்குகளும் ஏழு, எட்டாக பிரிந்து எம் மக்களின் வாக்குகள் பயனற்று போகும். எமது ஆசனம் எமக்கு தீங்கு செய்யும் தரப்புக்கே சென்று விடும். ஆகவே நிலைமையினை கருத்தில் கொண்டு இருக்கும் குறுகிய நாட்களுக்குள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் நல்ல முடிவை தமிழ் கட்சிகள் எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.

You missed