பு.கஜிந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணையும் கோரிக்கை தொடர்பில் விக்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஓரணியில் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். 

நாங்கள் தமிழரசு காட்சி தவிர்ந்த ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் தமிழ் பொதுக் கட்டமைப்பாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. 

தமிழரசு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடும் கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது. 

ஏனெனில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிற நிலையில் குறித்த வடையான் தொடர்பில் சக தமிழ் கட்சிகள் தலைவர்களுடன் பேசி இறுதி முடிவை தெரிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.