SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது.

கராத்தே ஜம்பவான் SHIHAN கே.இராமச்சந்திரன் ஞாபகார்த்தமாக கராத்தே போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் RAM KARATE DO Organization Srilanka ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தலைவர் கா.சந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

அக்கரைப்பற்றில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கல்விப்பணிப்பாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் ,கராத்தே சம்மேளன தலைவர், மற்றும் கராத்தே வீரர்கள் உட்பட பல அதிகாரிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.