கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது

பொது வேட்பாளர் கிழக்கில் மேலும் பின்தங்கலை ஏற்படுத்தும் என்பதால் நிராகரிக்கின்றேன் – சாணக்கியன் mp தெரிவிப்பு

இன்றைய தினம் பிரத்தியேக தொலைக்காட்சி ஒன்றுக்fhd செவ்வியில் ஊடகவியலாளரால் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு என்பதில் பிரதேசவாதம் எதுவும் இல்லை அது இயலாமையில் உள்ளவர்கள் எடுக்கும் ஒரு விடயம் ஆனால் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உண்டு நிலைப்பாடுகள் உண்டு.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணிலோடு, அனுர, சஜித் போன்ற பிரதான வேட்பாளர்களோடு பேச முடியாது இவ்வாறான சூழ் நிலையில் பொது வேட்பாளர் என்பது எமது கிழக்கு மக்களின் நிலைப்பாட்டில் கல்முனை விவகாரம் போன்று பாதிப்பை ஏற்படுத்தும் என சார்பட கருத்து வெளியிட்டுள்ளார்.