இரா சம்பந்தர் இடத்துக்கு இடத்திற்கு குகதாசன்!
பாராளுமன்றத்தில் இன்று(09/07/2024) செவ்வாய்கிழமை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் பதவி ஏற்கிறார்!
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவராகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவராகவும் இரா சம்பந்தன் தொடர்ந்து பதவியில் இருந்தார்.
அந்த வெற்றிடத்துக்கும் தற்போதுள்ள 10, பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை அந்த 10, பேரும் கூடி தெரிவு செய்யவேண்டும்.அதை இன்று அல்லது இன்னும் சில வாரத்துக்குள் தெரிவு செய்து சபாநாயகருக்கு கட்சி செயலாளர் எழுத்துமூலமாக வழங்கவேண்டும்.அல்லது பத்து உறுப்பினர்களும் கையொப்பம் இட்டும் வழங்கலாம்.
தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக..
????இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி;06, பா.உ,
- சிவஞானம் சிறிதரன்.-2010 தெரிவு
- எம் ஏ. சுமந்திரன்.-2010 தேசியபட்டியல்
- சாள்ஷ் நிர்மலநாதன்.-2015 தெரிவு
- இரா சாணக்கியன்.2020 தெரிவு
- தவராசா கலையரசன்.2020 தேசியபட்டியல்.
- சண்முகம் குகதாசன்.2024 தெரிவு
????தமிழீழ விடுதலை இயக்கம்
:03, பா.உ,
7.செல்வம்அடைக்கலநாதன்.-2000, தெரிவு
8.வினோ நோகராஜலிங்கம்.- 2001 தெரிவு
9.கோவிந்தன்கருணாகரம். 2020 தெரிவு
????தமிழ் மக்கள் விடுதலைக்கழகம்:01, பா.உ,
- தர்மலிங்கம்சித்தாத்தன்.- 2015 தெரிவு
இந்த பத்து உறுப்பினர்களில் ஒருவர் பாராளுமன்ற குழுத்தலைவராக தெரிவானாலும் அந்த பதவி ஒருவருடமும் நீடிக்க வாய்பு இல்லை.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2024, செப்டம்பர் மாததுக்குள் இடம்பெற்று புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி உடனே பாராளுமன்றத்தை கலைக்க வாய்புள்ளதால் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டுமே இந்த பதவி உண்டு.
பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் பதவிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர் பதவி அடுத்த பொதுத்தேர்தலுக்கு பின்னரே அதைப்பற்றி சிந்திக்கவேண்டும்.
இப்போதைக்கு அதைப்பற்றி எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
-பா.அரியதேத்திரன்-
09/07/2024