கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரால் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டன.
சுமார் மூன்று மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசாங்க அதிபரோ பிரதமரிடம் இடப்பட்ட கோரிக்கைக்கு அமைய கட்டளைகள் இடப்பட்டும் , நேரில் சென்று பார்க்கவில்லை, மக்கள் குறைகளை கேட்டறியவில்லை, என குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, இதற்கான கணக்காளர் நியமனம் பிணக்குகள் தொடர்பில் ,அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவாக நேரில் சென்று நடவடிக்கைகள் எடுத்து, தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.