கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
-புவிராஜா-
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு விழா இன்று 15.05.2024 சிறப்பாக இடம்பெற்றது. இப்புதிய நினைவுக்ககல் நிர்மாணத்திற்கான அனுசரனையை கல்முனை சரவணாஸ் ஜுவலறி உரிமையாளர் கே.பிரகலதன் வழங்கி இருந்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் யு P சு ளு சந்திரசேன அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உயர்ச்சிச்மிகு சேவைக்கு வித்திட்டவரும் இவ்வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்து பதவிஉயர்வு பெற்று சென்றவருமான டொக்டர் ஆர் முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அவரது உரையில் தற்போது கடமையில் இருக்கும் பணிப்பாளர் அவர்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் மீண்டும் தானே வைத்தியசாலைக்கு வருவேன் எனவும் உறுதியளித்தார். தான் பிறந்த இடமாக கல்முனையை நினைத்துள்ளதாகவும் மீண்டும் பிறந்த இடத்திலேயே கடமை செய்ய நினைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மட்டக்களப்பு பிராந்திய வைத்திய அதிகாரியாக பதவி உயர்வு பெற்று சென்றுள்ள வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் அயராத முயற்சியும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பல்வேறு தடைகளை தாண்டி சேவையிலும், வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியமை காலத்தால் அழியாத வரலாறாகும்.
இந் நிகழ்வில் வைத்தியசாலையின் ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பலரும் பங்குபற்றினர்.