மத்திய குழுவின் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் குழப்பங்களுக்கு மத்தியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன
இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாட்டுக்கு முன்னதான பொதுச்சபை கூட்டம் இன்று இடம்பெற்றது. மாநாடு நாளை இடம் பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
இன்றைய மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட புதிய பொறுப்புக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது
புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.
நீண்ட விவாதங்களும் குழப்பங்களும் தொடர்ந்தன.. அம்பாராய் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக சபையில் அறிவித்துள்ளார்.. மேலும் குழப்பங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்தன.iu
பொதுச் செயலாளர் குகதாசன்
சிரேஷ்ட உப தலைவர் சி வி கே சிவஞானம்
சிரேஷ்ட துணை செயலாளர் குணநாயகம்
இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி
துணைத் தலைவர்கள்
K. V.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம்
இணை செயலாளர்கள்
திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன், குருகுலநாதன்
ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்