13 திருத்தத்தை நிறைவேற்றாத அரசு இமாலயா பிரகடணத்தை நிறைவேற்றுமா? உலக்தமிழர் பேரவை பம்மலாட்டம் காட்டவேண்டாம்- நா.உ. கோ. கருனாகரன் காட்டம்–
(கனகராசா சரவணன்)
அரசியல் அமைப்பிலுள்ள 13 திருத்தச் சட்டத்தை கூட நிறைவேற்ற முடியாத அரசு இமாலயா பிரகடணத்தை ஏற்படுத்துவதா? இந்த நாட்டிலே இனப்பிரச்சனை தீர்வுக்கு குழப்பவாதிகளா எதிரானவர்களாக இருப்பவர்கள் இந்த புத்தபிக்குகள் எனவே உலகத் தமிழ் பேரவையுடன் இணைந்துள்ள புத்த பிக்குகள் முதலில் பௌத்த பீடங்களுக்கு கீழ் உள்ள பிக்குகளின் மனநிலையை மாற்றி இந்த இனப்பிரச்சனைக்காக தீர்வை காண்பதற்கான முயற்சி ஏற்படுத்த வேண்டுமே தவிர உலக்தமிழர் பேரவை பம்மலாட்டம் காட்டவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறை;சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடை செய்யப்பட்டு கைது செய்யப்பட்வர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரன், கிழக்கு மாகான முன்னாள்உப தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியேர் இன்று திங்கட்கிழமை (18) மாலை சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேசமும் ஜக்கியநாடுகள் சபையும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என உறுதிபட கூறிவருகின்றனா.; ஆனால் அதற்கு பதிலாக இன்னொரு சட்டத்தை கொண்டு வருவதற்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச முயற்சி செய்து கொண்டிருக்கின்றாh.; நாங்கள் அந்த சட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பதாக முடிவு எடுத்துள்ளோம.;
தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்க கூடிய எந்த சட்டம் வந்தாலும் எதிர்ப்போம் 1979 ம் ஆண்டு இந்த பயங்கரவாத சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதனை அப்போதைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்க்காமல் வெளி நடப்பு செய்திருந்தனர்.; அந்த நிலை மாறி நாங்கள் முற்றுமுழுதாக பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறி அதற்கு பதிலாக இன்னும் ஒரு சட்டம் கொண்டுவருவதை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்ப்போம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்களை கைது செய்தது ஒரு திட்டமிட்ட செயலாகும் ஏன் என்றால் இந்த முறை நினைவேந்தலில் ஒரு 15 பேரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிணையில் வெளிவராது கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்த அடுத்து மாவுpரர் நினைவேந்தலை செய்வதை மக்கள் பயப்பிடுவார்கள் என்று ஒரு செயலாகத்தான் பொலிசார் இந்த கைதுகளை செய்திருக்கின்றார்கள் என வெளிப்படையக தெரிகின்றது
இமயமலை பிரகடணம் என்பது கடந்த ஏப்பிரல் மாதம் ஒருசில பிக்குகளை அழைத்து புதிதாக ஒரு பெயரை சூட்டி இமாலய பிரகடணம் என நேபாளத்திலே செய்து அதனை 8 மாதங்களின் பின்னர் இலங்கைக்குள் வந்துள்ளது. இந்த பிரகடணத்தை கொண்டுவந்த உலகத் தமிழர் பேரவை அவர்களே கூறுகின்றனர் 39 வருடத்தின் பின்னர் இந்த நாட்டிலே கால்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
39 வருடத்துக்கு பின்னர் இந்த நட்டிலே கால்வைப்பவர்கள் இமாலய பிரகடணம் என கூறிக்கோண்டு புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வை கொண்டு வருகின்றார்கள் என்றால் யாருக்கு யாரை திருத்திப்படுத்துவதற்கு பூச்சாண்டிகாட்ட வெளிகிடுகின்றார்கள் என்று தெரியவில்லை.
இந்த இமாலய பிரகடணத்தில் 13 வது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற விடயங்கள் எதுவும் அதில் இல்லை புதிதாக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கி மக்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற அடிப்படையிலே அந்த பிரகடணத்தை செய்துள்ளனர்
இந்த பிக்குகள் சிலபேரை சேர்த்து கொண்டு இனப்பிரச்சகை;கான தீர்வை காண்பதற்கான ஒரு திட்டத்தை தயாரிப்பதை விடுத்து இந்த நாட்டிலே குழப்பவாதிகளா இனப் பிரச்சனை தீர்வுக்கு எதிரானவர்களாக இருப்பவர்கள் இந்த புத்த பிக்குகள்தான்
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே அத்துமீறிய சிங்கள குடியேற்றத்துக்கு காரணமாக இருப்பவர் அம்பிட்டிய சுமணரட்டன தேரர் உட்பட புத்த பிக்குகள்தான் 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என ஜனாதிபதி கூற்றை வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்தவர்கள் இந்தபிக்குகள்தான்
அதுபோல பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தது ஜே. ஆர். ஜெயவத்தனாவுடன் பிக்குகள் இணைந்து கொழும்பில் இருந்து கண்டியில் நோக்கி பாதையாத்திரையில் ஈடுபட்டவர்கள் எனவே புத்த பிக்குகள் இந்த நாட்டிலே இனப்பிரச்சனை இருக்கின்றது என அனைத்து பௌத்த பீடங்களுக்கு உலகத் தமிழ் பேரவையுடன் இணைந்துள்ள புத்த பிக்குகள் கூறி அவ்களுக்கு கீழ் உள்ள பிக்குகளின் மனநிலையை மாற்றி இந்த இனப்பிரச்சனைக்காக தீர்வைகாண்பதற்கான முயற்சி ஏற்படுத்த வேண்டும்.
அதேவேளை எதிர்வரும் 21ம் திகதி மாலை 3 மணிக்கு வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைஜனாதிபதி சத்திக்கு இருப்பதாக அறியப்படுத்தப்பட்டுள்ளது அப்போது இந்த கைதுகள் தொடர்பாக ஆணித்தரமாக பேசுவோம் என்றார்.