பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் கடல் பரப்பில் ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் கடற்கரை பிரதேசம் காவுகொள்ளப்படுவதனால் மீனவர்களும் பிரதேச குடியிருப்பாளர்களும் சொல்லொனா துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடற்கரைப் பிரசேத்திலுள்ள பயன்தரும் தென்னைமரங்கள் கடலரிப்பினால் தரையில் வீழ்ந்துகாணப்படுவதுடன் அவற்றின் வேர்களும் தரைக்கு மேலாக வெளிவந்தும் உள்ளது. இதனால் தென்னம் தோட்டங்களை பராமரித்து வருவோர் பெரும் நஸ்டத்தை எதிர்நோக்கிவருவதுடன் மீனவர்கள் தாம் ஓய்வுஎடுப்பதற்கும் , தமது தோணி ,படகு , மீன்பிடி வலை என்பவற்றை திருத்துவதற்காகபயன்படுத்தும் இயற்கையான நிழலும் இல்லாமல்போயுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
கடற்கரை பிரதேச மீனவர்கள் தமது தோணி மற்றும் படகுகளையும் நிறுத்திவைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும் , தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும் இல்லாமலிருப்பது தமக்கு பெரும்கவலையளிப்பதாகவும் , இந்த நிலமைஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகமும் ஒரு காரணமாகும் என பிரதேச மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்தற்போது கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புக் கல் இடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறாக தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் எதிர்காலத்தல் இப்பிரதேசத்தில் கடற்கரையொன்று முழுமையாக இல்லாமல்போனலும் போகலாம் என்ற அச்சம் இப்பிரதேசமக்களிடையே அதிகரித்துள்ளது.