பெரியநீலாவணை
S. அதுர்ஷன்-

பெரியநீலாவணை காவேரி கல்விசார் அமைப்பும்,, காவேரி விளையாட்டு கழகமும் இணைந்து நடத்தும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான(தரம் – 4,5,6) விஞ்ஞான கண்காட்சி முகாம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.

பெரிய நீலாவணை கிராமத்தை சேர்ந்த ஆரம்ப வகுப்பு மாணவர்கள் இந்த விஞ்ஞான கண்காட்சியில் பல்வேறு செயற்பாடுகளை செயல்முறை மூலம் கலந்து தெளிவுபடுத்தினர்.

பெரியநீலாவணையை சேர்ந்த பல சமூக ஆர்வலர்களும் ,கமு/ விஷ்ணு மகா வித்யாலயம் மற்றும் கமு/சரஸ்வதி வித்யாலயம் ஆகியவற்றின் அதிபர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

பட்டிருப்பு கல்வி வலய ஆரம்ப பிரிவு மாணவர்களும் கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவு மாணவர்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு பங்கேற்று விஞ்ஞான ரீதியாக அங்கு மாணவர்களால் வழங்கப்படும் செயற்பாட்டு முறைகளை கேட்டறிந்தனர்.

.அங்கு வருகை தரும் பலரும் இந்நிகழ்ச்சி திட்டத்தினை மிகவும் வரவேற்றதோடு இவ்வாறான நிகழ்ச்சிகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் .