உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊடாக பாடசாலைகள் மத்தியிலான சிறப்பு நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
12.09.2023 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை,14.09.2023 உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மற்றும் 15.09.2023 கல்முனை RKM போன்ற பாடசாலைகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மனநல பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் Dr.U.L சராப்டீன் தாதிய உத்தியோகத்தர்கள் . அழகரட்ணம் ,திருமதி.நி.மனோஜினி மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்ள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாதிய பொறுப்பு உத்தியோகத்தர். அழகரட்ணம் அவர்களின் வரவேற்பரையை தொடர்ந்து வைத்தியசாலையின் மனநல பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் Dr UL சராப்டீன் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை உணர்வை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு உரையும் மன அழுத்த நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையை தொடர்பு கொள்ள வேண்டிய1926 என்ற தொலைபேசி இலக்கம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனச்சோர்வு சம்மந்தமான மாணவர்களின் வினவிய சந்தேகங்களுக்கான விளக்கமளிக்கப்பட்டதுடன் நிகழ்வு தொடர்பாக ஆசிரியர்கள் மாணவர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்று நிகழ்வு நிறைவடைந்தது.