போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து தாய்மார்களை உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள்
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘குறைந்தபட்ச செலவு அதிகபட்ச போசனை’ திட்டத்திற்கு அமைவாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.ரமேஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் உள்ளூரில் கிடைக்கின்ற போஷாக்கான உணவுகளை சுவையாக தயாரித்து வழங்கும் செயற்றிட்டத்தை தாய்மார்களுக்கு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக குடும்ப நல உத்தியோகத்தர்கள் தெளிவூட்டியதுடன் அந்த உணவை தாய்மார்களுடன் பரிமாறி மகிழ்ச்சி அடைந்தனர்
வெள்ளிக்கிழமை(18) நடைபெற்ற இந்நிகழ்வில் பணிப்பாளர் சார்பில் பிரதம அதிதியாக பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி .அப்துல் வாஜித் கௌரவ அதிதியாக தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச். ரிஸ்பின் சுகாதார வைத்திய அலுவலகத்தின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார பரிசோதகர்களும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது