பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் ப்ரண்லி சிப் பௌன்டேசன் மற்றும் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் இணைந்து 100 வறிய மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு உடபுஸல்லாவ முத்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக ப்ரண்லி சிப் பௌன்டேசன் இன் உப தலைவர் கிரிசாந்தன் அவர்களும் செயலாளர் ஆரிபா அவர்களும், நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் இன் தலைவர் வினோஜ்குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது மாணவர்களுக்கு புதிய கற்றல் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும் நடாத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.
பிளேலோமவுண்ட் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள 56 மாணவர்களுக்கும், ரப்பானொக் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள 18 மாணவர்களுக்கும், சூரியகாபத்தன தமிழ் வித்தியாலயத்தில் உள்ள 26 மாணவர்களுக்கும் மொத்தமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான 100 மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மக்களுக்கு யோகக் கலையின் உண்மைகளை உணர்த்த சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே “அறிவொளி வளையம்” என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவொளி வளையத்தினால் இலங்கையில் பல இடங்களில் சேவைகளைச் செய்து வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.