பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் சுயேட்சைக் குழு உறுப்பினர் அமரதாஸ ஆனந்த என்பவர் தவிசாளராக ஆட்சி செய்து வந்த நிலையில் 14 குற்றச்சாட்டுக்கள் பெருன்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு 2023ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினால் வறிதான தவிசாளர் வெற்றிடத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறித்த புதிய தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி பிரேரித்து முன்மொழிந்தது அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் முருகப்பன் நிரோஜன் வழிமொழிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 07 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய தவிசாளராக தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய தவிசாளர் தெரிவினை தொடர்ந்து புதிய தவிசாளர் அந்தோனி சுதர்சன் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் பலரும் புதிய தவிசாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.மேலும் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளரை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சபைக்கு வருகை தந்து பாராட்டினார்.
புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையை சுற்றி சவளக்கடை பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.