(கனகராசா சரவணன்)
நாட்டிலுள்ள 8 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகும்.
எனவே பழைய முறையிலான விகிதாசார முறையே சிறந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை ஆலையடிவேம்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 3 வது இனமாக தமிழர்கள் வாழுகின்ற ஒரு மாவட்டம் ஒரு பாராளுமன்ற பிhதிநிதித்துவம் மாத்திரம் தான் கிடைக்கும் அதுவும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தால் மட்டும் தான் கிடைக்கும்2020 நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எமது மக்கள் வாக்களிப்பதை குறைத்ததன் காரணமாக பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிருந்தது அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.
நாங்கள் எங்களுடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை பிரச்சனைகளை கையாளவில்லை என்கின்ற ஒரு வினா மக்கள் மத்தியில் இருந்தது.
குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அதன் செயற்பாடுகள் நிர்வாக ரீதியான அடக்கு முறைகள் அதற்கு அரசு முறையான தீர்வை வழங்காத காரணமாக கடந்த ஆட்சிகாலத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து பயணித்தனர் என்ற அடிப்படையில் மக்கள் வெறுப்படைந்தமை.
அதேபோன்று அரசும் திட்டமிட்டு தமிழ் மக்களை அடக்கி ஆழவேண்டும் என்பதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில் எங்கள் ஊடாக ஒரு தீர்வு காண்பதை அவர்கள் இழுத்தடித்து எம்மக்களுக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்ததைப் போன்ற மாயையை எற்படுத்தியதன் காரணமாக நாங்கள் தோல்வியை தழுவினோம்.
எதிர்காலத்தில் நாங்கள் ஒற்றுமை என்ற அடிப்படையில் செயற்படும் ஒரு கடைப்பாடு இருக்கின்றது. அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று சொல்லி இருந்து கொண்டு தனி ஒருவர் வெளியேறி அவர் தலைமைத்துவத்தை எடுப்பதற்காக ஒரு கட்சியாக பதிந்து முன்னெடுப்பவர்கள் எல்லாம் ஒற்றுமை சம்மந்தமாக பேசுவதை நான் ஏற்கவில்லை.
உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால்; ஒரு தலைமைத்துவத்தில் இருந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை குறிப்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் நடந்தது.
அதேவேளை வடக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்ட அதிகமானவர்கள் இன்று ஆளுக்கு ஒரு கட்சியாக பதிவு செய்துள்ளனர்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து செயற்படுகின்ற கட்சிகளுடன் இணைந்து எதிர்காலத்திலே எங்களுடைய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதுடன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஒரு பொருத்தமான பிரதி ஒருவரை நிறுத்துவதற்கு முன்வருபவர்கள் குறைவாக இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை மக்கள் முன்னுக்கு தரவேண்டும்.
இப்பொழுது உள்ளூராட்சி மன்ற தேர்தல் என தெரிவிக்கப்படுகின்றது ஆனால் அரசாங்கம் ஒரு நிலையன திட்டத்தில் இல்லை. 2018 நடந்த உள்ளூராட்சி தேர்தலில் வட்டார விகிதாசார என்ற அடிப்படையில் மிக மோசமாக உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்தும் செயற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த தேர்தல் முறை பிழையான முறை இதனை இல்லாமல் செய்யவேண்டும் என சிறுபான்மை கட்சிகள் செயற்படுகின்றனர்.
ஆரம்ப அரசியலை முன்னெடுக்க அடித்தளமானது உள்ளூராட்சி மன்றமே எனவே இந்த நாhட்டிலே ஒரு ஜனநாயக ரீதியாக உள்ளூராட்சி மன்றதேர்தல் மூலம் தவிசாளரை மக்களால் தெரிவு செய்யும் போது ஜனநாயகம் உருவாகும்.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுகளில் எங்கள் மக்களின் நிலங்கள் அரச படைகளினால் வனவரிபாலன திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இது தொடர்பாக 2016 தொடக்கம் இதுவரைக்கும் பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்ததன் விளைவாக பொத்துவில் ஊறணியில் 76 பேருக்குரிய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுத்தோம்.
யுத்தம் நடைபெற்ற பிரதேசம் திருக்கோவில் இங்கிருந்து வெளியேறிய 4 கிராம சேவையாளர் பிரிவுகளான தங்கவேலாயுதபுரம், குஞ்சிக்குடியாறு, சாகாமம், சங்கமன்கண்டி போன்ற கிராமங்கள் முற்று முழுதாக இன்னும் குடியேற்றம் நடைபெறவில்லை ஆனால் அரசு தாங்கள் முழுமையாக குடியேற்றியதாக தெரிவிக்கின்றனர்.
வனபரிபாலன திணைக்களத்தின் ஆளுமைக்குள் 2693 ஏக்கர் காணி; இருக்கின்றது அதனை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம், நாடாளுமன்றில் பேசியுள்ளோன், அதனை விடுவிக்க வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் இனங்கியுள்ளனர். இதற்கினங்க பிரதேச செயலகம் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. அதனை மிகவிலைவில் மக்களிடம் வழங்வோம் என்றார்.