முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டை இறக்குமதி செய்ய முடியும் என அவர் பரிந்துரை செய்துள்ளார்.
பேக்கரி உற்பத்திகளின் விலை
இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கேள்விக்கு ஏற்ற அளவில் முட்டை நிரம்பல் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா அல்லது பாகிஸ்தானிடமிருந்து முட்டை இறக்குமதி செய்தால் ஒரு முட்டை 30 முதல் 32 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை விலை
தற்பொழுது முட்டையின் விலை 60 முதல் 70 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முட்டைக்கு கறுப்புச் சந்தை வர்த்தகம் நிலவி வருவதாகவும் இதனை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் என்.கே. ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.