ஹாஜியார் ஒருவரும் கல்முனை,சேனைக்குடியிருப்பு,களுவாஞ்சிகுடி,அட்டப்பள்ளம் பிரதேசங்களைச் சேர்ந்த ஐவரும் கைது.
இன்று அம்பாரை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் பிரதான வீதியிலுள்ள கைவிடப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வைத்து அரச இலட்சனைகளுடன் யூரியா எனும் பெயரில் கழிவு உப்புடன் கலக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கத் தயாரான சுமார் 44000 கிலோ திருட்டுப் பசளை கைப்பற்றப்பட்டது இந்த சம்பவம் தொடர்பில் விஷேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இன்று பகல் குறித்த அரிசி ஆலை சுற்றி வளைக்கப்பட்டு இந்த சட்ட விரோத சம்பவத்துடன் தொடர்புடைய உரிமையாளரான இந்த அரிசி ஆலை உரிமையாளரான ஹாஜியார் ஒருவர் மற்றும் வேலையாட்கள் ஐவர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதோடு கலப்படம் செய்யப்பட்ட 44000 கிலோ பசளையும் கைப்பற்றப்பட்டது இந்த சட்டவிரோத செயல் பல நாட்களாக நடைபெற்றிருக்கலாம் எனவும் இதனுடன் பல அதிகாரிகளும் தொடர்பு பட்டிருக்கலாம் எனவும் இதுபோல் வேறு இடங்களும் இயங்கலாம் எனவும் படையினர் கூறியதோடு இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடாத்தப்படும் எனவும் இந்த விடயத்திற்குரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறினர்.
விவசாயிகளே அவதானமாக இருங்கள்