நாட்டின் 9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மாகாண சபைகள் இல்லாததன் காரணமாக அதிகாரங்கள் ஆளுநர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களே தற்போது பதவியில் உள்ளனர்.
இந்தநிலையில் அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆளுநர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனூடாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.