பரிமாணம் – சிறப்பு கட்டுரை
கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் காணாமல் போகும் இன ஒற்றுமை!
✍️கட்டப்பன்
தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து சிறுபான்மை இனங்கள் மீட்சிபெற இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து போராடி வருகிறார்கள். இதன் காரணமாக இக்கால கட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்கள்,குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல்வாதிகளை பயன்படுத்திக்கொண்டனர். அதன் விளைவாக தமிழர்கள் அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டார்கள். அக்காலத்தில் இப்போதய சாகிரா கல்லூரியே தமிழ், முஸ்லிம் மக்களின் எல்லையாக இருந்தது. சாகிரா கல்லூரி அப்போதய அரசினர் தமிழ் கலவன் பாடசாலை.
சாய்ந்தமருது கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் 1966 ம் ஆண்டு கொரூரமான இன வன்முறைகளை தூண்டி வெளியேற்றப்பட்டார்கள். அதற்கு அப்போதய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்றைய சாய்ந்தமருது பெரியபள்ளி இருக்கின்ற பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இப்போதும் பாண்டிருப்பு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்று 1991 ல் திராய்க்கேணியில் இடம்பெற்றபோதும் அரசு கண்டுகொள்ளவில்லை. திராய்க்கேணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிங்களப்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் முஸ்லிம் காடையர்களால் பட்டப்பகலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தமிழர்களுக்கெதிரான முஸ்லிம்களின் வன்முறை வரலாற்றில் முக்கியமானவை.
தமிழர்களின் சிறுபான்மைகளுக்கான உரிமைப்போராட்டம் சுதந்திரம் பெற்றநாள் முதலே பல்வேறு வடிவங்களில் பரிணமித்து அவ்வப்போது அஸ்தமித்துப் போயிருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகால விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009 ல் மௌனிக்கப்பட்டபோது,தமிழர்கள் நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் அதனை முஸ்லிம்களே பெரிதும் கொண்டாடினர். அந்த 30 ஆண்டுகாலத்தில் தமிழர்கள் தாம் இருந்தவை யாவற்றையும் இழந்திருக்க, முஸ்லிம்கள் தங்களை எங்கோ உயர்த்திக்கொண்டனர்.
மாறிமாறி வருகின்ற சிங்கள அரசுகளுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேரம்பேசி தங்களது சமூகம்சார் சேவைகளை தேவைக்கு மேலதிகமாகவே நிறைவேற்றிக்கொண்டதுடன் மற்றைய சகோதர சிறுபான்மையான தமிழர்களை நசுக்கவும் தொடங்கினர். இதில் முஸ்லிம்களுக்கு பலிக்கடாவானது அம்பாரை மாவட்டத் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
பயங்கரவாத வரலாறுகளை தடயங்கள் ஏதுமின்றி தமிழர்மீது பதித்திருந்த முஸ்லிம்கள் தற்காலத்தில் தங்களுக்குள்ள அரசியல் பலத்தால் அதிகார அளுத்தங்களையும், பொருளாதார பலத்தால் குறுக்குவழிகளில் அதிகாரிகளை தம்வசப்படுத்தியும் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழரின் பாரம்பரிய நகரான கல்முனையில் உள்ள தமிழர் வாழ்விடங்கள் தமிழரசு கட்சியின் முஸ்லிம்களுக்கு சாதகமான செயற்பாடுகளால், மெல்லமெல்ல முஸ்லிம்கள் வசமாகத் தொடங்கியதற்கு மூலகாரணமாக அமைந்தது.
1989 ல் தனியான பிரதேச செயலகமாக இயங்கத்தொடங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக செயற்பாடுகளில் கல்முனை பிரதேச செயலாளர் (தெற்கு/முஸ்லிம்) அத்துமீறியதை வாய்மூடி மௌனியாகவும், முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் தமிழரசுக் கட்சி செயற்பட்டதன் காரணமாக கல்முனை வடக்கு பிரதேசத்தின் கீழ்வரும் தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் உள்ளடங்கும் நூற்றுக் கணக்கான ஹெக்ரெயர் காணிகளை இன்றுவரை முஸ்லிம்கள் கபளீகரம் செய்வதை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.
தங்களுக்கு விரும்பியது போன்று விரும்பிய நேரங்களில் இலங்கையின் அதியுச்ச சபையின் தீர்மானமான அமைச்சரவைத் தீர்மானத்தை கேள்விக் குறியாக்கும் செயற் பாடுகளில் கல்முனையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் அரசியல் வாதிகளும் அதிகாரிகளுக்கு கையூட்டுக்களை வழங்கி செயற்படுத்திவருவதாக குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியுள்ளன. இச்சந்தேகத்தை உறுதிசெய்வதுபோலான நடவடிக்கைகளை பின்வரும் பொதுநிருவாக அமைச்சின் கீழ்வரும் பல திணைக்களங்களும், காணி அமைச்சின் கீழ்வரும் திணைக்களங்களும் முஸ்லிம்களின் தமிழர்களுக்கு எதிரான விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் பிரதானமானவை.
இது தொடர்கதையாக, நில அளவைத் திணைக்களம் ஒருதலைப்பட்சமாக கல்முனை வடக்கின் கீழ்வரும் கிராம சேவகர் எல்லைகள் அக்கிராம சேவகர்களுடனும், அதற்குரிய வடக்குப் பிரதேச செயலாளரின் பங்குபற்றுதல் இன்றியும் தமிழர்களுக்கு பாதகமானமுறையில் உண்மைக்கு புறம்பாக கல்முனை பிரதேச செயலகத்தின் (தெற்கு/முஸ்லிம்) கீழ் இற்றைப் படுத்தியுள்ளமை, கல்முனை காணிப் பதிவகம் வடக்கு பிரதேச செயலகத்திற்கென தனியாகப் பேணிவந்த பதிவுப் புத்தகத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் (தெற்கு/முஸ்லிம்) இணைத்துள்ளமை, பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தரவுத் தளத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப எனவும், அதன் 29 கிராம சேவகர் பிரிவுகளை கல்முனை பிரதேச செயலகத்துடன் (தெற்கு/முஸ்லிம்) இணைந்தவாறு இற்றைப்படுத்தியமை அதன் பின்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப என்பதுடன் அதன் 28 கிராம சேவகர் பிரிவுகளை இற்றைப்படுத்தியமை என இப்பட்டியல் நீண்டுசெல்கின்றது.
இவ்வாறான நிலையில் உண்மையில் பொது நிருவாக அரச இயந்திரத்தை இயக்குவது யார் எனத்தேடவேண்டிய தேவை எழுகின்றது. கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகள் எவ்வளவு அடாவடித்தனங்களை தமிழர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தமுடியுமோ அனைத்தையும் அப்பட்டமாகவே அரங்கேற்றி வருகின்றமையும், இலங்கையின் ஒற்றை ஆட்சியின் கீழ் பல சட்டப்பிரமாணங்கள் இருக்கின்றபோதும் அவைகளை மீறி முஸ்லிம்கள் தமிழர்களை ஆழ்வதற்கும், அவர்களுடைய பூர்வீக நிலபுலன்களை தம்வசப்படுத்தவும், பொதுவான நியமங்களை மீறி தான்தோன்றித்தனமாக சமுர்த்தி பிரிவுகளை, கிராம அலுவலர் பிரிவுகளை அங்கீகாரமின்றி நடத்திச் செல்கின்ற கல்முனை பிரதேச செயலாளருக்கு (தெற்கு/முஸ்லிம்), அரச அதிகாரிகளும், திணைக்களங்களும் துணைபோவதன் இடையேயுள்ள மர்ம முடிச்சுகளுள் இருப்பது என்னவென ஆதாரங்களுடன் வெளிப்படுத்தவேண்டிய காலம் கனிந்துவருகின்றது.
இவை ஒருபுறமிருக்க 1993 ம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானத்தின்படி முழு அதிகாரத்துடன் கூடிய பிரதேச செயலகமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதேச செயலகம் ஒன்றை உப அலுவலகம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி கற்பனையில் தரக்குறைப்பு செய்ய முயற்சிக்கும் மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டுவரும் அரச அதிகாரிகளுக்கும், திணைக்களங்களுக்கு எதிராகவும், நியமங்களுக்கு முரணாக கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குள் சமுர்த்தி பிரிவுகளை, கிராம அலுவலர் பிரிவுகளை அங்கீகாரமின்றி நடத்திச் செல்கின்ற கல்முனை பிரதேச செயலாளருக்கும் (தெற்கு/முஸ்லிம்), மாவட்ட மற்றும் அமைச்சு மட்ட சமுர்த்தி அதிகாரிகளுக்கு எதிராகவும் நீதியான சட்டவிசாரணைகள் மேற்கொள்வதற்கான நடைமுறைகளை சிவில் அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்.
பல்வேறுபட்ட சந்தர்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்ளிட்ட சில முஸ்லிம் அரச அதிகாரிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆயுத முனையில் அல்லது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதென பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தெரிவித்து வருகின்ற கருத்துத் தொடர்பில்,இலங்கை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக எப்போதேனும் விடுதலைப் புலிகள் செயற்பட அனுமதிக்கப்பட்டி ருந்தார்களா? என்பது தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட வேண்டும். வடக்கு பிரதேச செயலகத்தை வர்த்தமானிப்படுத்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குகொண்டிருந்த விடுதலைப் புலி அமைப்பை சேர்ந்த அமைச்சர் யார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பகிரங்கப்படுத்த வேண்டும். தனது அரசியல் இலாபத்திற்காக மக்களை உசுப்பேற்றும், மற்றுமொரு சமூகத்தை கருவறுக்கும் நடவடிக்கைகளை ஹரிஷ் கை விட வேண்டும்.
இஸ்லாமிய தமிழர் உறவு அடிமட்டத்தில் ஓரளவு சுமுகமாக இருக்கிறது எனக் கூறினாலும், அரசியல் வாதிகளின் இனவாத அரசியலும் முஸ்லிம் அரச அதிகாரிகளின் அதிகாரப் போக்கும் அதைவிடவும் மேலோங்கியுள்ளது. தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும், சகோதரர்களாக வாழ வேண்டும் என்பதில் தமிழர்கள் உடன் படுகின்றபோதும், தமிழர் நலனை தாம் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் எண்ணம் மேலோங்கி இருக்கும் வரை கல்முனையில் தீர்வு என்பது அசாத்தியமானது.