நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அலுவலகம் நிறுவப்பட உள்ளது.
காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் திட்டம்
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவின் மேற்பார்வையின் கீழ் நிறுவப்படும் அந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கம் இலங்கையில் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களை தயாரிப்பதாகும்.
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வது தொடர்பிலான சட்டமூலமொன்று எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.