37 இராஜாங்க அமைச்சர்கள்
ஜனாதிபதி முன் பதவியேற்பு
- ராஜபக்ச குடும்பத்தில் ஷசீந்திரவுக்குக் கிடைத்தது நீர்ப்பாசனம்
- தமிழர்களில் பிள்ளையான், வியாழேந்திரன், அரவிந்த குமார், சுரேன் ராகவன் சத்தியப்பிரமாணம்
- முஸ்லிம்களில் காதர் மஸ்தானுக்கு மாத்திரமே அதிர்ஷ்டம்
- பெண்களில் சீதா, கீதா, டயனாவுக்குப் பதவிகள்
-யசிகரன் –
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் புதிய இராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் இன்று பதவியேற்றனர்.
இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி இன்று பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களின் விபரம் வருமாறு:-
- ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
- ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – நிதி
- லசந்த அழகியவண்ண – போக்குவரத்து
- திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு
- கனக ஹேரத் – தொழில்நுட்பம்
- ஜனக்க வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
- ஷெஹான் சேமசிங்க – நிதி
- மொஹான் பிரியதர்சன டி சில்வா – விவசாயம்
- தேனுக விதானகமகே – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
- பிரமித்த பண்டார தென்னக்கோன் – பாதுகாப்பு
- ரோஹண திசாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
- அருந்திக்க பெர்ணான்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
- விஜித்த பேருகொட – பிரிவேனா கல்வி
- லொஹான் ரத்வத்தை – பெருந்தோட்டக் கைத்தொழில்
- தாரக பாலசூரிய – வெளிவிவகாரம்
- இந்திக்க அனுருத்த – மின்வலு, எரிசக்தி
- சனத் நிசாந்த – நீர் வழங்கல்
- சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள்
- சாந்த பண்டார – வெகுஜன ஊடகம்
- அநுராத ஜெயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு
- சதாசிவம் வியாழேந்திரன் – வர்த்தக, வாணிபம்
- சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
- பியல் நிசாந்த டி சில்வா – மீன்பிடி
- பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சி
- டீ.வி சானக்க – வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு
- டீ.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்தி
- ஷசீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசனம்
- மருத்துவர் சீதா அரம்பேபொல – சுகாதாரம்
- காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதாரம்
- அசோக்க பிரியந்த – உள்நாட்டலுவல்கள்
- அரவிந்த குமார் – கல்வி
- கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
- சிவநேசத்துரை சந்திரகாந்தன் – கிராமிய வீதி அபிவிருத்தி
- கலாநிதி சுரேன் ராகவன் – உயர் கல்வி
- டயனா கமகே – சுற்றுலாத்துறை
- சாமர சம்பத் தஸநாயக்க – ஆரம்பக் கைத்தொழில்
- அனுப பியும் பஸ்குவால் – சமூக வலுவூட்டல்