முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை தாய்லாந்துக்கு சென்று சேர்ந்திருக்கிறார் என தாய்லாந்து அரசு தகவல் தெரிவிக்கின்றன
சிங்கப்பூரில் அவருக்கான விசா நாளைய தினத்துடன் நிறைவடையும் நிலையில் தாய்லாந்தில் தங்குவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவர் கோரியிருந்தார் அதன் அடிப்படையில் தாய்லாந்தில் விசா இல்லாமல் 90 நாட்கள் தங்கி இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர் தற்காலிகமாக தங்குவதற்காகவே தாய்லாந்து இந்த அனுமதியை வழங்கி இருப்பதாகவும் இது அரசியல் தஞ்சம் இல்லை எனவும் தாய்லாந்து அரசாங்க தகவல்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தன.
சிங்கப்பூரில் விசா நிறைவுற்றதும் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்து இருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்கு இது உகந்த நேரம் அல்ல என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.