மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு

( வி.ரி.சகாதேவராஜா)

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபைக்காக “வண்டில்” சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுத் தலைமை வேட்பாளர் சு.சசிகுமாரின் தலைமையில் புதியதொரு அணுகுமுறையில் மக்கள் சந்திப்பு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமாகியது.

முதற்கட்டமாக குழுவினர் ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை தரிசித்தனர்.

 பின்பு  மக்களுக்காக போராடி உயிர்நீத்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கப்டன் அ.சந்திரநேருவின் நினைவுத் தூபியடிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர் .

அதன்போது அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.