பிள்ளையானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு இன்று (18) கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்