( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முக்கியமான கல்முனை மாநகர தேரோட்டம் நாளை (11 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி ஆரம்பமாகிறது.
ஆலய மகோற்சவத்திருவிழா கடந்த (01) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து பத்து நாட்கள் பகல் இரவுத்திருவிழாக்கள் நடைபெற்று 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் இடம்பெறுகிறது .
12-ம் தேதி சனிக்கிழமை காலை தீத்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேட்குமரன் ( பிரபல தமிழ் ஆசிரியர் ) தெரிவித்தார் .
மகோற்சவத்திருவிழா கிரியைகளை மகோற்சவபிரதம குருவான யாழ்ப்பாணம் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ சி. குககணேசக் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஸ்ரீராமச்சந்திர தவசீலக் குருக்கள் முன்னிலையில் நடாத்தவந்தார்.
தினமும் பகல் திருவிழா இரவு திருவிழா இடம் பெற்று அன்னதானமும் இடம்பெற்று வந்தது.நாளை 11ஆம் தேதி வழமை போன்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான தேர்த்திருவிழா இடம்பெற இருக்கின்றது .
நாளை மறுதினம் 12ஆம் தேதி தீர்த்தத் திருவிழா நடைபெறஇருக்கின்றது என்று ஆலய தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேட்குமரன் மேலும் தெரிவித்தார்.
