மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி.

இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரத் தூணும் உடைந்து விழுந்துள்து திருத்த வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் அதே இடத்தில் மீண்டுமொரு சோகச் சம்பவம். மட்டக்களப்பு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் துரதிஷ்ட வசமாக அவ் இடத்திலே விபத்தில் சிக்கிக்கொண்டனர் இவ் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மற்றுமொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் அம்பாறை மத்தியமுகாம் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான இளங்குடும்பஸ்தரான என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்த நிலையில் அண்மையில்தான் விடுமுறையில் வீடு வந்திருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.