தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார்.
சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழரசுக்கட்சியின் பெயரால் தமிழ்தேசியம்தை அழிக்கிறார்கள் இது கவலைக்குரியது என பொத்துவில் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் உபதவிசாளரும் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சை அணியின் தலைமை வேட்பாளரும் தொழில் அதிபருமான பெருமாள் பார்த்தீபன் தெரிவித்தார் .
அவர் தொடர்ந்தும் கூறுகையில் காலா காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொத்துவில் பிரதேச முக்கிய தூணாக விளங்கிய பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் ஆகிய எனக்கு இம் முறை உள்ளூராட்சி தேர்தலில் அக் கட்சி சார்பில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் நான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் தமிழ்தேசியத்தில் பற்றுதலும் கொண்டதால் புறம் தள்ளப்பட்டேன்.
இன்று தமிழ்த்தேசிய அரசியல் அதல பாதாளத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறது . தலைமைகள் தமக்குள் வேறுபடுகின்றன. குறிப்பாக 2010, க்கு பிறகு தமிழரசு கட்சிக்குள் நுழைந்தவர்கள் அவர்களுக்கு சாமரை வீசுபவர்களை வேட்பாளர்களாக நியமிக்கும் பக்கசார்பான நிலைமை வடக்கு கிழக்கு எல்லா மாவட்டத்தில் காணமுடிகிறது. அதனால் தமிழரசுக்கட்சிக்கு பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற ஆபத்து இருக்கின்றது.
மக்களுக்காக கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல.
கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் செய்த தவறை இம்முறையும் செய்யவே என்னைப்போன்ற தமிழ்த்தேசியவாதிகளை ஒதுக்கி சிங்கள தேசியத்துக்கு துணைபோனவர்களை வேட்பாளர்களாக நியமித்துள்ளனர்.
அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே நான் சுயேச்சையாக பொத்துவிலில் போட்டியிடுகிறேன் என்வும்,
மக்கள் மனைநிலை வேறு தமிழரசு கட்சியின் சில அரசியல்வாதிகளின் மனநிலை வேறாக இருக்கின்றது.
உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் நாம் எல்லோரும் சேர்ந்துதான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் மக்களே சிந்தித்து தனிநபர்களை உயர்த்துவதற்கு வாக்களிக்காமல் தமிழ்த்தேசிய கொள்கைக்காகவும், அதனூடாக அபிவிருத்திக்காகவும் மாம்பழச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். எனவும் மேலும் கூறினார்.
